கூகுளின் முன்னாள் CEO மீது முன்னாள் காதலி மனு தாக்கல்
கூகுளின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷிமிட் மீது, அவரது முன்னாள் காதலி மிஷெல் ரிட்டர் ஆள் கண்காணிப்பு, துஷ்பிரயோகம் மற்றும் ஆணாதிக்கம்' ஆகிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, தற்காலிக தடையுத்தரவு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தனக்கு $100 மில்லியன் நிதி வழங்கிய தனது ஏ.ஐ. ஸ்டார்ட்அப் நிறுவனத்திலிருந்து ஷிமிட் தன்னை பூட்டி வைத்ததாகவும் மிஷெல் ரிட்டர் கூறியுள்ளார்.
டிசம்பர் 4ஆம் திகதி நீதிமன்ற விசாரணை
ஷிமிட்டின் தொழில்நுட்பப் பின்னணி காரணமாக தன்னால் ரகசியமாகப் பேசவோ, மின்னஞ்சல் அனுப்பவோ முடியவில்லை என்றும் ரிட்டர் குற்றம் சாட்டினார்.
ஷிமிட் தனது பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தாமல் இருக்க மவுன உத்தரவில் கையெழுத்திடுமாறு கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், ஷிமிட்டின் வழக்கறிஞர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை "தெளிவாகப் பொய்யானவை" என்று நிராகரித்து, இது நீதித்துறையைத் துஷ்பிரயோகம் செய்யும் முயற்சி எனக் கூறி உள்ளனர்.
ரிட்டரின் பெற்றோரைத் தனியார் துப்பறியும் நிபுணர்கள் பின்தொடர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையேயான நிதி மற்றும் ஒப்பந்தப் பிரச்சினைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கு குறித்து டிசம்பர் 4ஆம் திகதி நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது.