பாகிஸ்தான் பிரதமரை கடுப்பேத்தும் முன்னாள் மனைவி!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் (Imran Khan) முன்னாள் மனைவி ரெஹாம் கான் ( Reham Khan) அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் (Imran Khan) தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதன்மீது வருகிற 3 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் (Imran Khan) அரசு கவிழும். இம்ரான் கான் தற்போது தனது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் உள்ள நிலையில் அவரது கூட்டணி கட்சிகள் இரண்டும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்று எதிர்க்கட்சி வரிசையில் சேர்ந்து விட்டன.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் (Imran Khan) முன்னாள் மனைவி ரெஹாம் கான் ( Reham Khan) அவரை கடுமையாக விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் இந்தியா டுடே செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,
இம்ரான் கான் (Imran Khan) ஒரு ஏமாற்றுக்காரர். அவர் அறிவுரைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. அவர் அறிவுரைக்கு செவிசாய்த்திருந்தால், ஒருவேளை நான் இன்னும் அவருடன் இருந்திருப்பேன் என்றும் ஒருவேளை மற்றவர்கள் அவரை விட்டு விலகியிருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் இம்ரான் கான் (Imran Khan) முகஸ்துதி மற்றும் பாராட்டுக்களை மட்டுமே கேட்க விரும்பும் ஒரு பிரபலம் என்றும், அவர் கைதட்டல்களைக் கேட்க வேண்டும், அவர் தனது பெயர் ஓங்கி ஒலிப்பதை கேட்க வேண்டும் என விரும்புபவர் எனவும் அவர் கூறினார்,
தனது அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி ஒரு பெரிய சர்வதேச சதியின் ஒரு பகுதி என்று இம்ரான் கான் (Imran Khan) கூறுவது அவர் கட்டும் கதை என தெரிவித்த முன்னாள் மனைவி, இது ஒரு பி கிரேடு படத்தின் கதைக்களம் போன்றது எனவும் கூறினார்.
அதேவேளை ரெஹாம் கான் ( Reham Khan)வெளியிட்டு உள்ள ஒரு டுவிட்டல்
இம்ரான் கான் (Imran Khan) பிரதமராக இல்லாதபோது பாகிஸ்தான் சிறப்பாக இருந்தது பாகிஸ்தான் பிரதமராகும் அளவுக்கு இம்ரான் கானிடம் (Imran Khan) "உளவுத்துறை திறமை மற்றும் வேறு எந்த திறனும் இல்லை என டுவிட் செய்து உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.