ஈரானில் மொராக்கோ சிறையில் தூக்கிலிடப்பட்ட ஓரினச் சேர்கையாளர்கள்
ஈரான் நாட்டில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இருவர் தூக்கிலிடப்பட்டதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் ஓரின சேர்க்கை, திருநங்கைகளுடன் உறவு மாற்று விபச்சாரம் ஆகியவை மிகப்பெரிய குற்றங்களாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அந்நாட்டு அரசு பாரபட்சமின்றி மரண தண்டனை விதிக்கும்.
இந்த நிலையில் தற்போது ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட மெஹர்தாத் கரீம்பூர் மற்றும் பரித் முகமதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும், ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் மொராக்கோ சிறையில் தூக்கிலிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதே குற்றச்சாட்டில் ஈடுபட்ட இருவரை அதே சிறையில் தூக்கிலிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.