கியூபா ஹோட்டலொன்றில் ஏற்பட்ட துயரம்; 22 பேர் பலி; 74 பேர் படுகாயம்

Cuba
By Sulokshi May 07, 2022 10:26 AM GMT
Report

 கியூபா ஹோட்டலொன்றில்  ஏற்பட்ட வெடி விபத்தில்  22 பேர் பலியானதுடன்  74 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

 தலைநகர் ஹவானாவிலுள்ள சரடோகா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. 86 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் ஹோட்டலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஹோட்டல் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கியூபா  ஹோட்டலொன்றில்  ஏற்பட்ட துயரம்;  22 பேர் பலி; 74 பேர் படுகாயம் | Explosion At A Cuban Hotel 22 Killed

ஹோட்டலை புதுப்பிக்கும் பணி நடந்ததால் அங்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் தங்கவில்லை. ஆனால் சக்திவாய்ந்த வெடி விபத்தால் ஹோட்டலை சுற்றியுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று அதிகாலை நிலவரப்படி 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டதுdan 74 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு வைத்தியசாலையில்  அனுமதித்ததுடன் அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

கியூபா  ஹோட்டலொன்றில்  ஏற்பட்ட துயரம்;  22 பேர் பலி; 74 பேர் படுகாயம் | Explosion At A Cuban Hotel 22 Killed

இந்த சம்பவம்  குறித்து ஜனாதிபதி மிகுவல் டயஸ் கேனல் (Miguel Díaz-Canel) கூறும்போது,

‘இது குண்டு வெடிப்போ அல்லது தாக்குதல் சம்பவமோ கிடையாது. இது ஒரு சோகமான விபத்து. ஹோட்டலை சுற்றியுள்ள கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்’ என்றார்.

இந்த விபத்து தொடர்பாக கியூபா டி.வி. சேனல் கூறுகையில் , லொறியில் இருந்து ஹோட்டலுக்கு எரிவாயு விநியோகித்த போது கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தது.


GalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US