கனடாவில் வீடு ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்து! 4 பேர் வைத்தியசாலையில்
கனடாவில் வீடு ஒன்றில் பாரிய விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் ஒன்றாரியோ கிட்ச்னரின் எல்ம் ரிட்ஜ் மற்றும் குயின்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
வீட்டினுள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த வீட்டுக்கும் அருகாமையில் இருந்த வீடுகளுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஓர் ஆணும் ஓர் பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உட்பட்ட நிலையில் உள்ளுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் வாட்டர்லூ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் 519-570-9777 or Crime மற்றும் 1-800-222-8477 ஆகிய இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.