நேபாளம் வாழ் கனடிய மக்களுக்கு எச்சரிக்கை
நேபாளம் வாழ் கனடிய மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த வாரம் தொடங்கிய ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதால் இந்த எச்சரிக்கையை கனடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
நேபாளத்திற்கு பயணம் செய்யும் தனது குடிமக்களுக்கு அதிகப்படியான எச்சரிக்கை கடைப்பிடிக்க கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.
நேபாளத்தின் பல மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டது. இதனிடையே, திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேபாளத்தில் உள்ள தனது குடிமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசு கட்டிடங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், என கனடா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மேலும் உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் வெளியிடும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என மேலும் அறிவுறுத்தியுள்ளது.