லெபனானில் பேஜர்கள் வெடித்தில் வெளியான புதிய தகவல்!
லெபனானில் பேஜர்கள் வெடித்தில் 9 பேர் பலியானதுடன் 3000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த சம்பவத்தில்ன் பின்னனியில் இஸ்ரேல் இருப்பது அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.
இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு நாசகார வேலை
ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் இதுவரை 3000 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ஹிஸ்புல்லா ஆர்டர் கொடுத்துத் தைவானில் தயாரிக்கப்பட்ட 5,000 பேஜர்களுக்குள், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பானது, சிறிய அளவிலான வெடி பொருட்களை (3 கிராம்) வைத்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சதி திட்டம் பல மாதங்களாகத் தீட்டப்பட்டுள்ளதாகவும், தைவானைத் தளமாகக் கொண்ட கோல்ட் அப்பல்லோ தயாரித்த 5,000 பேஜர்களை குழு ஆர்டர் செய்துள்ளதாக மூத்த லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தது.
மேலும் புதிய பேஜர்களில் 3 கிராம் வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், எனினும் அது பல மாதங்களாக ஹிஸ்புல்லாவால் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.