கனடாவில் பாலமொன்றில் வெடிப்புச் சம்பவம்
கனடாவில் பாலமொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் போர்ட் யோர்க் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போர்ட் யோர்க்கின் Bathurst வீதியில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பாலத்தின் கீழ் பகுதியில் வெடிப்புச் சம்பவம் இடம்பெறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்பட்டுள்ளது.
எதனால் இந்த விபத்து ஏற்பட்டது, எப்போது விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வெடிப்புச் சம்பவம் பதிவானதா அல்லது தீ விபத்தா என்பது குறித்து பொலிஸார் துல்லியமான தகவல்களை இதுவரையில் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விபத்து காரணமாக பாலம் மூடப்பட்டு பின்னர் மீளவும் திறக்கப்பட்டுள்ளது.