கனடாவில் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை : எதனால் தெரியுமா?
கனடாவில் வெப்பம் காரணமாக மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக வயது முதிர்ந்தவர்கள் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட 12 நகரங்களில் வெப்பம் அதிகமாக காணப்படும் போது கூடுதல் மரணங்கள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெப்பம் காரணமாக 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீடுகள் அதிகளவில் வாடகைக்கு விடப்படும் நகரங்களில் வெப்பம் காரணமாக மரணங்கள் கூடுதலாக பதிவாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
வெப்பநிலை கூடுதலான நாட்களில், ரொறன்ரோ மற்றும் மொன்றியலில் சுவாச உபாதைகளினால் முதியவர்கள் அதிகளவில் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வான்கூவார், பிரிட்டிஸ் கொலம்பியா, சர்ரே போன்ற இடங்களில் அதிக வெப்பநிலைக்கு பழக்கப்படாதவர்கள் வெப்ப நிலை அதிகரிப்பினால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.