ஆல்பர்ட்டா மக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
ஆல்பர்ட்டா முழுமையும் வெப்ப அலைக்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 29 முதல் 35 C வரையில் இருக்கும் எனவும், இது வார இறுதி முழுவதும் நீடிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக இரவு நேரங்களில் வெப்பநிலை 14 முதல் 20 C வரையில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பகலில் வெப்ப அலை வீசக் கூடும் என்பதால் மக்கள் அதிக அளவு நீர் அருந்த வேண்டும் எனவும், வெளியில் நடமாடும் மக்கள் போதிய ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, Edmonton நகர நிர்வாகம் வெப்ப அலையில் இருந்து முதியவர்கள் உள்ளிட்ட பாதிக்கும் ஆபத்து மிகுந்தவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் வடமேற்கு அமெரிக்காவில் பற்றியெரியும் காட்டுத்தீயால் வெளியேறும் புகையால் ஆல்பர்ட்டாவிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.