உணவில் இருந்து இளைஞரை வெறித்துப் பார்த்த கண்கள் ; ஆராய்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
தனது தட்டில் இருந்த உணவில் இரண்டு கண்கள் தன்னையே பார்ப்பதை கவனித்த இளைஞர் ஒருவர் அதனை ஆராய்த நிலையில் அவருக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. ஏனெனில் அவரது உணவு தட்டில் இருந்தது செத்துப்போன எலியின் கள்கள் என்பதை அறிந்துகொண்ட அவர் திடுக்கிட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஸ்பெயின் நாட்டில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு நேர்ந்த வினோத சம்பவத்தை அதிர்ச்சியுடன் விவரித்ததுடன், உணவுப் பொருளை வாங்கிய சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் மீது புகார் அளித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிநாடுகளில் குளிர்பதன பெட்டிகளில் சேமிக்கப்படும் காய்கறிகள், இறைச்சி என உணவுப் பொருட்களைத் தான் பெரும்பாலும் மக்கள் வாங்கி சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் சில நேரங்களில் பூச்சிகள், பல்லிகள் போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறோம். பேக்கிங் செய்யும் போது இவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் சரியான முறையில் கவனிக்காமல் அஜாக்கிரதையாக செயல்படுவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாங்கிய உணவுப் பொருளில் செத்த எலி இருந்துள்ளது. அதை கவனிக்காத அந்த இளைஞர் அதை சாப்பிட்ட பின்னரே ஏதோ சாப்பிடக்கூடாத ஒரு பொருளை சாப்பிட்டுவிட்டதாக அவருக்கு தெரியவந்திருக்கிறது.
ஜூவான் ஜோஸ் என்ற அந்த இளைஞர் காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்துள்ளார். வீட்டுக்கு வாங்கி வந்த உணவுப் பொருட்களை சமைத்து முடிந்த அந்த இளைஞர் அதை ஒரு தட்டில் போட்டு சாப்பிடத் தொடங்கியிருக்கிறார்.
அப்போது தட்டில் ஏதோ கருப்பாக இருந்த பொருளை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்ட போது அது மிகவும் வித்தியாசமாகவும், மொறுமொறுப்பாகவும் இருப்பதை உணர்ந்தார். அதே நேரத்தில் அது முள் முட்டைக்கோசு (artichoke) என அவர் கருதியிருக்கிறார். ஆனால் தனது தட்டில் இருந்த உணவில் இரண்டு கண்கள் தன்னையே பார்ப்பதை கவனித்த ஜூவான் ஜோஸ் திடுக்கிட்டுள்ளார்.
ஏனெனில் , அவர் வாங்கிய உணவுப் பொருளில் ஏதோ ஒரு உயிரினம் இறந்துகிடந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். அதன் பின்னரே அ தட்டில் இருந்தது செத்துப் போன எலி என்பது அவருக்கு தெரியவந்தது.
சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஜூவான் ஜோஸ் காய்கறிகளை வாங்கி வந்த போது அதில் இருந்த எலியை அவர் கவனிக்கவில்லை. இதனையடுத்து தற்போது அவர் அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் சப்ளையரை தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும், அவர்கள் பொதுவாக தீவிர சோதனைகளை செய்பவர்கள் எனவும், இனி அனைத்து நிலைகளிலும் பரிசோதனையை தீவிரமாக மேற்கொள்ளுவதாக கூறியதாகவும் சூப்பர் மார்க்கெட் தரப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.