பிரேசில் விமானவிபத்தை நேரில் பார்த்தவர்கள் பகீர் தகவல்
பிரேசிலின் சாவ்பவ்லோ நகரில் விமானம் விழுந்து விபத்த்தின்போது விமானத்தில் பயணம் செய்த 61 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விமான விபத்தை நேரில் பார்த்த நபர்கள் சம்பவம் தொடர்பில் தகவல்கள் பகிர்ந்துள்ளனர். அதில்,
விமானம் விழும் சத்தம் கேட்டதும் நான் ஜன்னலிற்கு வெளியே பார்த்தேன் அதுவிழுந்து நொருங்கிய தருணத்தை பார்த்தேன் என பெலிப்பே மகல்ஹேஸ் என்பவர் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
மதில்மேலால் எறிப்பாய்ந்து சென்றேன்
என்ன நடந்தது என பார்ப்பதற்காக விமானம் விழுந்த இடத்தை பார்ப்பதற்காக வின்கெடொ நகரத்தில் உள்ள எனது வீட்டிலிருந்து வெளியே ஓடிச்சென்றேன். அச்சமடைந்து என்ன செய்வதென தெரியாமல் மதில்மேலால் எறிப்பாய்ந்து சென்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை விமானம் விழுந்து நொருங்கிய நகரத்திற்கு அருகில் வசிக்கும் நெதலி சிகாரி தான் மதிய உணவுஉண்ணும்வேளை அருகில் பாரிய சத்தங்கள் கேட்டன என தெரிவித்துள்ளார். அது ஆளில்லா விமானத்தின் சத்தம் போல காணப்பட்டது அதனை விட பெரிய சத்தம் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் பல்கனிக்கு சென்றுகொண்டிருந்தவேளை விமானம் சுழன்றுகொண்டிருந்தது என அவர் பிரேசில் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். ஒரிருசெகன்ட்களில் நான் வழமையான சத்தம் இல்லை என்பதை உணர்ந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது விழுந்த தருணம் மிகவும் பயங்கரமானது,என அவர் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் சிதைவுகளை பார்த்தேன்
எனது வீடு கடும் புகைமண்டலத்தால் சூழப்பட்டதால் நாங்கள் அங்கிருந்து பொருட்களுடன் வெளியேறவேண்டிய நிலையேற்பட்டது நான் காயமடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பியட்ரோ என்பவர் பலர் அதனை வீடியோ எடுக்க முயன்றதை பார்த்ததாக தெரிவித்துள்ளார். நான் விமானத்தின் சிதைவுகளை பார்த்தேன் கபின் பகுதி மாத்திரமே மிஞ்சியிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நான் அந்த விமானநிலையத்திற்கு சென்றவேளை அதிகாரிகள் ஊழியர்கள் எவரும் இருக்கவில்லை இறுதியாக ஒருவர் வந்து நான் விமானத்தில் ஏற முடியாது என தெரிவித்தார் என அட்ரியானோ அசிஸ் என்ற பயணி தெரிவித்துள்ளார்.
நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் , எனினும் விமான விபத்தி இருந்து எனது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.