அமெரிக்க பயணிகளுக்கு முகக் கவசம் கட்டாயம்!
அமெரிக்காவில், கடந்த 7 ஆம் திகதி வரையிலான அறிக்கையின்படி, 27.6 சதவீதம் மக்கள் கொரோனாவின் எக்ஸ்.பி.பி.1.5 என்ற உருமாறிய அதிதீவிர பரவல் தன்மை கொண்ட ஒமிக்ரோன் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவின் ஒமிக்ரோன் வைரசின் துணை வகை தொற்றானது சமீப நாட்களாக விரைவாக பரவி வருகிறது.
எனினும், இந்த வகை வைரசானது, சர்வதேச அளவில் தொற்றை ஏற்படுத்தி புதிய அலையை ஏற்படுத்த கூடிய சாத்திய கூறுகள் பற்றி தெளிவாக தெரியவில்லை.
இன்னிலையில் , கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வர கூடிய எந்தவொரு பயணியும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என பரிந்துரைக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.