AI தொழில்நுட்பத்தால் முகநூலில் திடீரென மாறிய முகங்கள்! இது ஆபத்தானதா?
முகப்புத்தகத்தில் கடந்த சில தினங்களாக AI (செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள்) தொழிநுட்பத்தை பயன்படுத்தி தங்களது புகைப்படங்களை அவதாராக மாற்றும் முறை வைரலாகியுள்ளது.
AI தொழில்நுட்பத்தால் சிலரின் முகங்கள் நகைச்சுவையாகவும் சிலரின் முகங்கள் விகாரமாகவும் காட்சியளிப்பதோடு அதை அனைவரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
இவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அதன் இயந்திர கற்றலை அடிப்படையாக கொண்டு நாம் பதிவேற்றும் படங்களின் அடிப்படையில் டிஜிட்டல் உருவப்படங்களை உருவாக்குகிறது.
மேம்பட்ட திறன்கள் இருந்தபோதிலும், AI அமைப்புகள் மனிதனைப் போன்ற புரிதல், பொது அறிவு மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.
அவை அல்காரிதம்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் செயல்படுகின்றன, இது சில சூழ்நிலைகளில் பிழைகள் அல்லது தவறான விளக்கங்களுக்கு வழிவகுக்கும்.
முகநூலில் இவ்வாறு AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இரசிக்கும் படியாகவும் விகாரமாகவும் மாறியுள்ள சிலரின் பதிவுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.