30 ஆண்டுகளின் பின்னர் தெரியவந்த உண்மை; அதிர்ச்சியில் தம்பதிகள்!
செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த அந்த குழந்தையின் தந்தை அவர் அல்ல என்ற உண்மை 30 வருடங்களின் பின்னர் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கிலீவ்லாண்ட் பகுதியில் ஜெனைன் - ஜாண் மைக் தம்பதியினர் வசித்து வருகின்றனர். குறித்த தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு இல்லாததால், 1991ம் ஆண்டு கருத்தரிப்பு மையம் ஒன்றில் சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், ஜெனைன் - ஜாண் மைக் தம்பதியினருக்கு 1992ம் ஆண்டு செயற்கை கருத்தரிப்பு முறையில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜெஸ்ஸிகா என பெயர் வைத்து வளர்த்து வந்தனர். ‘தாங்கள் மிகவும் ஆசையுடன் பெண் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்து வந்த நிலையில், ஜெஸ்ஸிகா பிறந்தாள்’ என அந்த தம்பதிகள் சாந்தோஷம் அடைந்திருந்தனர்.
இப்போது 30 வயதாகும் ஜெஸ்ஸிகாவுக்குன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது, ஜெஸ்ஸிகா தன் கணவருடன் ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்ல நினைத்ததால் ஜெஸ்ஸிகா மற்றும் அவருடைய கணவர் இருவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது தான் ஜெஸ்ஸிகாவின் மரபணு பரிசோதனை முடிவில் அவருடைய தாயாரின் மரபணுவுடன் அவருடைய மரபணு ஒத்துப்போய் இருந்தது. ஆனால் அவருடைய தந்தையாரின் மரபணுவுடன் ஒத்துப்போகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.
அதன்பின்னர் தான் செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த அந்த குழந்தை இன்னொரு நபருடைய விந்தணுவை செலுத்தி பிறந்தது என அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து அந்த பெண் குழந்தையின் தந்தை தான் அல்ல என கண்டறிந்துள்ளார் ஜாண் மைக்.
அதேவேளை ஜெனைன் - ஜாண் மைக் தம்பதியினர் செயற்கை கருத்தரிப்புக்கு சென்றிருந்த போது, வந்திருந்த இன்னொரு நபரின் மரபணுவுடன் ஜெஸ்ஸிகாவின் மரபணு ஒத்திருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து தம்பதிகள் தற்போது மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் நாங்கள் எங்களுக்கான வாரிசை பெற்றெடுக்க நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு என்று ஜெனைன் - ஜாண் மைக் தம்பதியினர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
