அந்த சேவையை பெற்றுக்கொண்டு பணம் செலுத்த மறுத்த நபர்: ரொறன்ரோவில் சம்பவம்
ரொறன்ரோவில் பாலியல் சேவையை பெற்றுக்கொண்டு பணம் செலுத்த மறுத்ததாக கூறி ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் டர்ஹாம் பொலிசார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலில், 32 வயதான ஜனார்த்தனன் சத்தியந்தன் மீது $5,000க்கு கீழ் மூன்று திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், மூன்று முறை பாலியல் சேவையை பெற்றுக்கொண்டு பணம் செலுத்த மறுத்த குற்றத்திற்காகவும் வழக்கு பதியப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
A 32-year-old male is facing charges in relation to the purchase of sexual services from three different sex professionals.
— Durham Regional Police (@DRPS) May 2, 2023
See full release here: https://t.co/gf4EB9D1N4 pic.twitter.com/iS6sMk23Fp
இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. பிப்ரவரி மாதம் டர்ஹாம் பகுதியில் பாலியல் தொழிலாளி ஒருவரை தொடர்புகொண்டு, சந்தித்த பின்னர் குறித்த நபர் பணம் செலுத்த மறுத்துள்ளார்.
இந்த நிலையில், மற்றொரு பெண் முன் வந்து அதே சந்தேக நபருடன் தொடர்புடைய இரண்டு இதுபோன்ற சம்பவங்களைப் புகாரளித்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
இந்த நிலையில், உறுதிமொழியின் பேரில் சத்தியந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.