5 வயது மாணவன் தாக்கியதில் மயக்கமான ஆசிரியை
அமெரிக்காவில் ஊனமுற்ற ஐந்து வயது மாணவனால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சுயநினைவை இழந்தார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ‘பைன்ஸ் லேக்ஸ்’ பிரைமரி பள்ளி உள்ளது.
800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பும் உள்ளது. இந்த வகுப்பில் 5 வயது மாணவர்கள் இருவர் ஒருவர் மீது ஒருவர் பொருட்களை வீசி கலாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதை கண்டித்த ஆசிரியர் மாணவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மாணவன் ஒருவன் ஆசிரியரை முஷ்டியால் தாக்கினான்.
அதே போல் காலில் உதைத்துள்ளான் . இதில், 40 வயது ஆசிரியை சுருண்டு விழுந்தார். தகவல் அறிந்ததும், பள்ளி ஊழியர்கள், மயங்கி விழுந்த அவரை, ஸ்ட்ரெச்சரில் கிடத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய ஆசிரியர் வீட்டுக்குச் சென்றார். ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.