கனடாவில் ஆறு மாத சிசுவின் உயிரை காக்க விடுக்கப்பட்டுள்ள உருக்கமான கோரிக்கை
கனடாவில் ஆறு மாத சிசு ஒன்றின் உயிரை காப்பாற்றுவதற்காக போராடி வரும் அந்த சிசுவின் குடும்பத்தினர் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
உடல் உறுப்பு தானம் செய்வோரின் உதவியை இந்த குடும்பத்தினர் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த சிசு ஈரல் உபாதைக்கு உள்ளாகியுள்ளது எவரேனும் ஈரல் உறுப்பு மாற்ற சிகிச்சைக்கே உடல் உறுப்பு தானம் செய்தால் தமது ஆறு மாத சிசுவின் உயிரை மீட்டு எடுக்க முடியும் என குறித்த சிசுவின் பெற்றோர் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பங்களாதேஷை பூர்வீகமாகக் கொண்ட டொரன்டோ வாழ் குடும்பத்தினரே இவ்வாறு பொது மக்களிடம் உருக்கமான கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
சிசுவின் பெற்றோர் ஆரோக்கியமானவர்கள் என்ற போதிலும் அவர்கள் இருவரும் தங்களது உறுப்பு தானத்திற்கு விரும்பிய போதிலும் அது சிசுவிற்கு பொருந்தக்கூடிய வகையில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அலீஸா என்ற இந்த சிசுவிற்கு Biliary Atresia என்ற அரசிய வகை நோய் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு கனடாவிற்கு வந்த Moniruzzaman Moni. குடும்பத்தினர் மகளின் உயிரை காப்பாற்றுவதற்கு பெரிதும் போராடி வருகின்றனர்.
ஓ பொசிடிவ் அல்லது ஓ நெகடிவ் இரத்த மாதிரியைக் கொண்ட 18 முதல் 50 வயது வரையிலானவர்கள் தங்களது தங்களது பிள்ளைக்கு உறுப்பு தானம் செய்ய முடியும் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
சிசுவின் உயிரை காப்பாற்றும் நோக்கில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உடல் உறுப்பு தான கொடையாளி ஒருவரை இந்தக் குடும்பத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.