துப்பாக்கி சூட்டில் பிரபல கால்பந்து வீரர் மனைவி பலி
தென் அமெரிக்கா நாடான பாரகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் நேற்றைய தினம் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. அதன்போது மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலின்போது 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பராகுவே கால்பந்து வீரர் இவான் டாரஸின் மனைவி கிறிஸ்டினா விட்டா அராண்டாவும் மரணமடைந்துள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான கிறிஸ்டினா, பாடிபில்டர் மற்றும் மாடல்.
சிறந்த கால்பந்து வீரர் இவான் டோரஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினா ஆகியோர் கச்சேரியில் கலந்து கொண்டதாக தெரிகிறது. தலையில் சுடப்பட்டபோது கிறிஸ்டினா கச்சேரி அரங்கின் விஐபி பகுதியில் இருந்தார்.
அவரை அவரது கணவர் இவான் மற்றும் உதவியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்டினா உயிரிழந்தார். கால்பந்து வீரர் இவான் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டினா சமீபத்தில் தங்கள் 10 ஆண்டு திருமணத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிசூட்டில் கிறிஸ்டினா பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.