பிறந்த நாளை முன்னிட்டு தோனியை திரும்பி பார்க்கவைத்த ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் வீரரான தோனியின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் 41 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர்.
கிரிக்கெட் உலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் மகேந்திர சிங் தோனி. தல, மகி என ரசிகர்கள் இவரை செல்லமாக அழைப்பார்கள்.
சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது.
அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்று இந்தியாவின் கனவை நினைவாக்கினார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் 41-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேனியின் 41 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் அமைத்து உள்ளனர்.