தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மோட்டார் சைக்கிள் பயணி பலி
வவுனியா புளியங்குளம் சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.