அமெரிக்காவில் இரு இந்தியர்களுக்கு நேரந்த கதி ; இறுதியில் வெளியான தகவல்
அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை கொல்லும் அளவுக்கு கோகைன் போதைப் பொருள் கடத்தியதாக இந்திய லாரி டிரைவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான லாரி ஒன்று செல்வதாக தகவல் கிடைத்தது.

போதைப் பொருள்
அந்த லாரியை கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த இந்தியர்களான குர்பிரீத் சிங், ஜஸ்வீர் சிங் ஓட்டிச் சென்றனர். லாரியை சோதனையிட்டபோது, ஓய்வறை பகுதியில் 140 கிலோ எடையுள்ள கோகைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு 60 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒருவரை கொல்ல 1.2 கிராம் கோகைன் போதைப் பொருளே போதுமானது.
'தற்போது பிடிப் பட்டுள்ள கோகைன், ஒரு லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானது' என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய லாரி டிரைவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இருவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவு க்குள், 2023ல் வந்ததும் தெரியவந்துள்ளது.