உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட தந்தையும் குழந்தைகளும்: கனடாவில் அதிரவைக்கும் ஒரு சம்பவம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், ஒரு தந்தையும் அவரது பிள்ளைகளான இரட்டைக் குழந்தைகளும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கியூபெக் மாகாணத்திலுள்ள Lanaudière என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அங்கு ஒரு ஆணும், இரண்டு குழந்தைகளும் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
(Ian Lamontagne/Facebook)
அந்த நபரின் பெயர் Ianik Lamontagne (46) என்றும், அந்தப் பிள்ளைகளுடைய பெயர்கள் Antoine மற்றும் Tristan என்றும் தெரியவந்துள்ளது.
3 வயதான அந்தக் குழந்தைகள் இருவரும் இரட்டையர்கள் ஆவர்.
Ianik, தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்தக் குழந்தைகளின் தாய் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இட்டைக் குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Gabrielle Proulx/Radio-Canada)