உலகின் கொடூரத்தின் உச்சம்; பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த துயரம்
தென் ஆபிரிக்காவில் பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தையை, கற்பழித்து கொன்றுள்ள பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் குழந்தைக்கு நப்பி இல்லாதால், குழந்தையின் தாயார் அதனை வாங்க கடைக்குச் சென்றபோதே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
அதிர்ந்து போன மருத்துவர்கள்
தாயார் வீடு திரும்பியவேளை குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்துள்ளது.
என்ன நடந்தது என்பதை அறியாத தாயார் குழந்தையை கொண்டு வைத்தியசாலைக்குச் சென்ற போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். பாதிக்கப்பட்ட குழந்தை மறு நாள் இறந்து விட்டது.
ஹூகோ என்னும் 37 வயதான இந்த நபரே இப்படியான ஒரு ஈனத் தனமான செயலைச் செய்துள்ளார். தென்னாபிரிக்க நீதிமன்றில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தந்தை , 1 வாரக் குழந்தை என்று கூடப் பாரமல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொன்ற இது போன்ற சைக்கோவை எங்கேயும் பார்த்திருக்க முடியாது என்று தான் சொல்லவேண்டும்.