நியூசிலாந்தில் பிள்ளைகளுடன் 3 வருடங்களாக மறைந்திருந்த தந்தை சுட்டுக்கொலை
நியூசிலாந்தில் கடந்த நான்கு வருடங்களாக தனது மூன்று குழந்தைகளுடன் தலைமறைவாக இருந்த டாம் பிலிப்ஸ் எனப்படும் தந்தை பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பான மனைவியுடனான தகராறில், கடந்த 2021 டிசம்பர் முதல் நியூசிலாந்து காட்டுப்பகுதியில் தனது குழந்தைகளுடன் தலைமறைவாக இருந்துள்ளார்.
திருட்டுச் சம்பவம்
சம்பவத்தில் பிலிப்ஸ், பியோபியோ என்பவரே, கிராமப்புறத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரி மீது பிலிப்ஸ் பல முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் அந்த அதிகாரிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இதையடுத்து, பொலிஸார் பதிலக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பிலிப்ஸ் உயிரிழந்தார். பிலிப்ஸுடன் அவரது ஒரு குழந்தை இருந்ததாகவும், அந்தக் குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
உடனடியாக, ஏனைய இரண்டு குழந்தைகளையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து அந்த இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து, பிலிப்ஸின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடனான நெருக்கத்தை இழந்திருந்ததாகவும் அவர்களை மீண்டும் வீட்டிற்கு அன்புடன் வரவேற்க ஆவலுடன் உள்ளதாகவும் தாயான கேட் தெரிவித்துள்ளார்.
12, 10 மற்றும் 9 வயதுடைய பிலிப்ஸின் மூன்று குழந்தைகளும் மரோகோபா என்ற தொலைதூர கிராமப்புறத்திலிருந்து காணாமல்போன சம்பவம், நியூசிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பிலிப்ஸை கண்டறிய முடியாமல் அந்நாட்டு பொலிஸார் 4 வருடங்களாக கஷ்டப்பட்ட நிலையில் இறுதியில் சில வாரங்களுக்கு முன்பு, பிலிப்ஸூம் அவரது குழந்தையும் ஒரு கடையில் திருடும் காட்சி சிசிடிவியில் பதிவானதாக கூறப்படுகின்றது.