அழிந்துபோன பறவையின் இறகு படைத்த சாதனை!
நியூசிலாந்தைச் சேர்ந்த அழிந்துபோன பறவையின் இறகு விற்பனையில் சாதனை படைத்துள்ளது. பறவையின் இறகு 28,400 டொலர்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பறவைக்கு 'ஹுயா' என்று பெயர். இப்பறவைக்கு எஞ்சியிருப்பது இந்த இறகு மட்டுமே. இறகு ஏலத்தில் 3,000 டொலர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதைவிட பலமடங்கு பெறுமதிக்கு விற்கப்பட்டுள்ளது.
'ஹுயா' என்பது நியூசிலாந்தின் பூர்வீக குடிமக்களான மவோரி மக்களின் புனித விலங்கு. 'ஹுய்யா' (ஹுயா) இறகுகள் தலைக்கவசங்களாகவும் பரிசுகளாகவும் பயன்படுத்தப்பட்டன. '
அதேவேளை ஹுயா' பறவை கடைசியாக 1907 இல் தென்பட்டதாகவும் அதன் பின்னர் அப்பறவை இனம் எங்கும் தென்பட்வில்லை எனவும் கூறப்படுகின்றது.