தாலிபான்கள் நமது சகோதரர்கள்: சர்ச்சையில் சிக்கிய கனேடிய பெண் அமைச்சர்
கனடாவில் செய்தியாளர் சந்திப்பின் போது, தாலிபான்கள் நமது சகோதரர்கள் என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் பெண்கள் மற்றும் பாலின சமத்துவ அமைச்சர்.
அமைச்சரின் குறித்த பேச்சு விவாதமான நிலையில், அதை ஒரு கலாச்சார குறியீடாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். கனடாவின் பெண்கள் மற்றும் பாலின சமத்துவ அமைச்சரான Maryam Monsef, ஈரானில் பிறந்து ஆப்கானிஸ்தானில் வளர்ந்தவராவார்.
புதன்கிழமை முன்னெடுத்த செய்தியாளர் சந்திப்பின் போது, நமது சகோதரர்களான தாலிபான்களுடன் பேச இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள எந்தவொரு நபரும் நாட்டிற்கு வெளியே பாதுகாப்பாகவும் அச்சுறுத்தலின்றியும் செல்வதை உறுதி செய்ய நாங்கள் உங்களுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்றார்.
மட்டுமின்றி, வன்முறை, இனப்படுகொலை, பெண் கொலை, பாரம்பரிய கட்டடங்கள் உட்பட உள்கட்டமைப்பு அழிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்திருந்தார் அமைச்சர் Maryam Monsef.
ஆனால் தாலிபான்களை சகோதரர்கள் என குறிப்பிட்டது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அவர்கள் தீவிரவாத அமைப்பாக இருந்தாலும், அவர்களும் தங்களை இஸ்லாமியர்கள் என்றே கூறி வருகின்றனர்.
அதனாலையே, தான் அவர்களை சகோதரர்கள் என குறிப்பிட்டதாக விளக்கமளித்துள்ளார்.
மட்டுமின்றி, தாலிபான்களை ஒருபோதும் ஆதரிக்கும் எண்ணம் இல்லை எனவும் அமைச்சர் Maryam Monsef சுட்டிக்காட்டியுள்ளார்.