கனடாவில் புயலில் பாதிக்கபட்டோருக்கு உதவ களமிறங்கிய இராணுவம்!
பியோ புயலினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ இராணுவம் அனுப்பி வைக்கப்படுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அட்லாண்டிக் கனடா முழுவதிலும் இந்த புயல் காற்றுத் தாக்கத்தினால் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இராணுவத்தை அனுப்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மணித்தியாலங்களாக பிரதேச மக்கள் மோசமான அனுபவங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான தருணங்களில் வழமை போன்று கனேடியர்கள் ஒன்றிணைந்து ஒவருக்கு ஒருவர் தோள் கொடுப்பது வழமையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோவா ஸ்கோட்டியா மணிக்கு 141 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதாகவும் 200 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கபட்டவர்களுக்கு பல்வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ட்ரூடோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தை பிரதமர் ரத்து செய்துள்ளார்.
புயல் காற்று தாக்கம் காரணமாகவே அவர் இவ்வாறு தனது விஜயத்தை ரத்து செய்துள்ளார்.