உலக அழகிப் போட்டியில் சர்ச்சை ; முட்டாள் எனக் கூறியதால் வெளிநடப்பு
தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் அழகிகளை போட்டியின் மேற்பார்வையாளர் அவமதித்தாக சர்ச்சை எழுந்துள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கில் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் பல்வேறு நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம்
இந்த நிலையில், போட்டியில் கலந்துகொண்ட அழகிகளுக்கும் மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு மற்றும் மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்தின் தலைவராக இருந்து வரும் நவாத் இத்சராகிரிசைலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போட்டியில் கலந்துகொண்ட அழகிகள் பெரும்பாலானோர் விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்று நவாத் கூறிய நிலையில், விளக்கமளிக்க முன்வந்த மெக்சிகோ அழகி பாத்திமா போஷை `முட்டாள்’ என்று திட்டியுள்ளார்.
இதனையடுத்து, பெண்ணாகவும் மெக்சிகோ பிரதிநிதியாகவும் தன்னை மதிக்கவில்லை என்று கோபமுற்ற பாத்திமா, அறையைவிட்டு வெளியேறினார்.
தொடர்ந்து, மற்றவர்களும் அறையைவிட்டு வெளியேறினால், போட்டியில் பங்கேற்க இயலாது என்று நவாத் எச்சரித்த நிலையிலும், பாத்திமாவுக்கு ஆதரவாக மற்றைய நாடுகளின் அழகிகளும் அறையைவிட்டு வெளியேறினர்.
அழகிகளின் வெளிநடப்பைத் தொடர்ந்து, நவாத் மன்னிப்பு கோரினார். இதனிடையே, தாய்லாந்தில் போட்டி நிலைமையைக் கண்காணிக்க மூத்த நிர்வாகியை அனுப்பி வைக்கவிருப்பதாக மிஸ் யூனிவர்ஸ் அமைப்பு கூறியுள்ளது.