விமானத்திலிருந்து இறங்கும்போது திடீரென விழுந்த அதிபருக்கு நேர்ந்த நிலை!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி துபாய் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும்போது திடீரென கால் இடறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கடந்த 30-11-2024 துபாய் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும் போது கால் இடறி விழுந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அவரது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
" பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்தியர்கள் சர்தாரின் காலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சர்தாரின் காலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி இன்னும் 4 வாரங்கள் சிகிச்சையில் இருப்பர். மேலும் சர்தாரி முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" என்றார்.