சக மாணவர்களின் வெறிச்செயல்... அமெரிக்காவில் இந்திய மாணவர் படுகொலை!
ஆஸ்திரேலியா - மெல்போர்ன் நகரில் எம்.டெக் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த 22 வயதான நவ்ஜீத் சந்து வாடகை தகராறில் ஈடுபட்ட இந்திய மாணவர்களை தடுக்க முற்பட்டபோது நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சந்துவின் மாமா கூறும்போது,
சந்துவிடம் கார் இருந்தது. அதனால், வீட்டிலுள்ள தன்னுடைய உடைமைகளை எடுப்பதற்காக சந்துவின் காரில் அவருடைய நண்பர் சென்றிருக்கிறார்.
அந்த நண்பர் வீட்டின் உள்ளே சென்றதும், வெளியே சிலர் சத்தம் போட்டு, மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சத்தம் கேட்டு சந்து சென்றுள்ளார்.
அப்போது, சக இந்திய மாணவர்கள் வாடகை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். இதனால் சந்து, சண்டை போட்டவர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
இதன்போது ஆத்திரத்தில் இருந்த மாணவர்கள், குறுக்கே வந்த சந்துவை நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்து விட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.
சந்து வருகிற ஜூலையில், குடும்பத்தினரை பார்க்க இருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 26 வயதான அபிஜீத் மற்றும் 27 வயதான ராபின் கார்டன் ஆகிய இருவரையும் விக்டோரியா பொலிஸார் தேடி வருகின்றனர்.