கனடாவில் திருடிய வாகனத்தைச் செலுத்திய பெண் விபத்தில் சிக்கிய நிலையில் கைது
கனடாவில், களவாடப்பட்ட வாகனமொன்றை செலுத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மிஸ்ஸிசாகுவாவில் களவாடப்பட்ட வாகனத்தை செலுத்திய போது வீதி சமிக்ஞை விளக்குகள் அடங்கிய தூண் ஒன்றில் குறித்த பெண் மோதியுள்ளார்.
விபத்தில் சிக்கிய பெண், வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
டுன்டாஸ் மற்றும் கெலன் எரின் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தினை மேற்கொண்டு தப்பிச் பெண்ணை பொலிஸார் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளின் மூலம் இந்த வாகனம் களவாடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.