படப்பிடிப்பு செட்டில் இடம்பெற்ற சோகம்...குண்டு பாய்ந்து உயிரிழந்த பெண் ஒளிப்பதிவாளர்
படப்பிடிப்பு தலத்தில் துப்பாக்கி சுடுதல் காட்சியில் பெண் ஒளிப்பதிவாளர் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹாலிவுட் இயக்குனர் ஜோயல் சோசோ இயக்கத்தில் உருவாகை வரும் படம் தான் ரஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பானது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பிரமாண்ட படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்றது. அதில் ஒரு காட்சியாக அலெக் பால்டா சுடும் காட்சி படமாக்கப்பட்டது. அதனபோது துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டானது பெண் ஒளிப்பதிவாளரை ஹாலினா ஹட்சன்ஸ் என்பவரை தாக்கியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார்.
மேலும் இயக்குனர் ஜோயல் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.