ஸ்கார்பரோவில் வாகனம் மோதியதில் பெண் பாதசாரி உயிரிழப்பு
கனடாவின் ஸ்கார்பரோவில் புதன்கிழமை காலை ஒரு வாகனம் மோதியதில் பெண் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் காலை 10 மணிக்கு முன்பாக பிரைட்லி ட்ரைவ் Bridley Drive மற்றும் பிரிம்வுட் பொலிவொர்ட் Brimwood Boulevard அருகே, மெக்வொன் வீதி McCowan Road மற்றும் பின்ச் அவன்யூ Finch Avenue பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயெ இருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்கு காரணமான சூழ்நிலை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு கருப்பு நிற SUV பாதையை விட்டு விலகி ஒரு மரத்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், ஓட்டுநர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.