விமானத்தில் சிகரெட் பிடித்த பெண் பயணி ; சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோ
துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் இருந்து சைப்ரஸ் செல்லும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் சிகரெட் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்த காணொளியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது விமானத்தில் நீல நிற புரூக்கா மற்றும் கண்ணாடி அணிந்தபடி ஒரு பெண் ஏறினார். இவர் ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டு திடீரென சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார்.
இதனை அந்த விமானத்தில் இருந்த ஊழியர்கள் தட்டிக் கேட்ட போதிலும் அவர் அதனை மறைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
விமான ஊழியர்கள் அந்த பெண்ணின் கையில் இருந்த சிகரெட் லைட்டரை பிடுங்கிய போது அவர் இருக்கையை தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளார்.
விமான ஊழியர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இது குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
Passenger on a flight from Istanbul to Cyprus tried to light the plane on fire pic.twitter.com/homvqIg4Qg
— TaraBull (@TaraBull808) March 21, 2025