ஐந்தாண்டு ஆட்சியின் இறுதி அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம்
பிரான்சில் கடந்த ஐந்தாண்டு கால இமானுவேல் மக்ரோனின் ஆட்சியின் தற்போதைய அமைச்சரவையானது எதிர்வரும் 13ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் இந்த அமைச்சரவையின் கடைசி ஆலோசனைக் கூட்டத்தை மக்ரோன் கூட்டினார். மேலும் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி தற்போது மேலோங்கியுள்ளது. தற்போதைய பிரதமர் தனது பதவி காலத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ளார், அவரை தொடர்ந்து புதிய பிரதமர் யார் என்பது தெரியவில்லை.
மேலும் கூட்டத்தின் போது புதிய பிரதமர் யார் என்பது தனக்கு தெரியும் என்று மக்ரோன் தெரிவித்தார்.
பிரதமர் குறித்த தகாவலானது வெளியான பின்பு தான் அவர் தனது அமைச்சரவையை அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.