நாட்டை விட்டு வெளியேறுகிறாரா பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி சுனக் ?
பிரித்தானிய நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) , பிரித்தானிய பிரதமராகும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டால் நாட்டைவிட்டு வெளியேறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா சென்றுவிடலாம் என அவரது நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கலிபோர்னியாவின் Santa Monica பகுதியில் ரிஷி சுனக் (Rishi Sunak) பெயரில் 5.5 மில்லியன் பவுண்டுகள் பெருமதியான வீடு ஒன்று உள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவில் பிரதமராகும் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தால், நாட்டைவிட்டு வெளியேறி Silicon Valley-ல் பணிக்கு செல்லவும் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார்.
ரிஷி சுனக் (Rishi Sunak) மீது விசாரணைக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson ) உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, அவரது எதிர்கால திட்டம் தொடர்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
தமக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து இன்னொரு பத்தாண்டுகள் பிரித்தானிய நாடாமன்றத்தில் குப்பைகொட்டும் நபரல்ல ரிஷி சுனக் (Rishi Sunak) எனக் கூறும் அவரது நண்பர், ரிஷி சுனக் (Rishi Sunak) பிரித்தானியாவின் பிரதமராகப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்டால், அதன் பின்னர் அவர் வெளியேறிவிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரிஷி சுனக்கின் (Rishi Sunak) இந்தியரான மனைவியின் வரி ஏய்ப்பு விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் முன்னர் வரையில், அடுத்த பிரதமர்கள் பட்டியலில் முன்வரிசையில் ரிஷி சுனக் (Rishi Sunak) இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.