கைவிரல்களும் எங்கள் ஆயுதம்; பைடனுக்கு பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி
இஸ்ரேல் தன்னிடம் உள்ள அனைத்துவளங்களையும் பயன்படுத்தி தனியாக போரிடும் எனவும், எங்கள் விரல்நகங்களையும் பயன்படுத்தி போரிடும்வோம் எனவும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தினை இடைநிறுத்துவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதில் அளித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தனது 76 வது சுதந்திரதினத்தை நெருங்குகின்றது என தெரிவித்துள்ள அவர் 1948ம் ஆண்டு யுத்தத்தின்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கு எதிராக ஆயுததடை விதிக்கப்பட்டிருந்தது எங்களிடையே உள்ள வலிமை வீரம் ஒற்றுமையுடன் நாங்கள் வெற்றிபெற்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் அனேகவிடயங்களில் நாங்கள் பொதுவான கருத்தை கொண்டிருந்தாலும், சில விடயங்கள் குறித்து கருத்து முரண்பாடு காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தாம் தனித்து நிற்கவேண்டிய நிலையேற்பட்டால் நாங்கள் தனித்து நிற்போம் தேவைப்பட்டால் விரல்களைகூட ஆயுதமாக்குவோம் எனவும் நெதன்யாகு கூறியுள்ளார்.