வணக்கம் எனத் தொடங்கிய போரிஸ் ஜான்சன்! வாழ்த்துக்கள் என முடித்த ஜஸ்டின் ட்ரூடோ
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையான தைப்பொங்கலுக்கு கனடா பிரதமர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரிட்டன் பிரதமர் பொங்கலின் புனித சந்தர்ப்பத்தில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று இரவு, உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
வணக்கம், எங்கள் அருமையான பிரிட்டிஷ் தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும், நான் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நீங்கள் ஒன்றாகக் கூடி, கொண்டாடவும் எதிர்நோக்கவும் நிறைய இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.” என போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் கூறினார்.
இது கொரோனா போன்ற துயரமான காலமாக இருந்தாலும், குறைந்த பட்சம் சுவையான அரிசி பொங்கலை நீங்கள் அனைவரும் மிக விரைவில் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நிச்சயமாக, பாரம்பரியமாக இந்த வழிபாட்டு நாள் அறுவடையின் வருகையை கொண்டாடுகிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்.