ஈரான் புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் தீ விபத்து ; 32 பேர் பலி
ஈரானின் போதை பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. வடக்கு பகுதியில் கஸ்பியன் கடல் பகுதியையொட்டிய கிலான் மாகாணத்தில் குறித்த தீவிபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதோடு , 16 பேர் காயமடைந்துள்ளனர் ஈரான் வயர் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லாங்கிரவுடு நகரில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில், பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.