நடுவானில் பல்டி அடித்த விமானம் ; நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட பெரும் அசம்பாவிதம்
நடுவானில் அருகருகே வந்த விமானங்கள் மோதல் தவிர்க்க, பல்டி அடித்த விமானத்தில் பணியாளர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
அமரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பர்பாங்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சவுத்வெஸ்ட் விமானம், திடீரென 500 அடி உயரத்துக்கு கீழே பல்டி அடித்தது. ராணுவ விமானத்துடன் மோதுவதை தவிர்க்க முயன்ற போது இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
தூக்கி வீசப்பட்ட பயணிகள்
மிகக்குறைவான வினாடிகளில் நேரத்தில் 300 அடி உயரத்துக்கு விமானம் கீழே இறங்கியது. இந்த திடீர் பல்டியால், இருக்கையில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். விமானத்தில் இருந்த இரண்டு பணிப்பெண்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. விமானியின் சாதுரியமான முயற்சியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விமானத்தில் பயணம் செய்த பயணிகள் தங்களது துயரமான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளனர்.