லண்டன் பேருந்தில் 14 வயதுச் சிறுவன் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை
லண்டனில் 14 வயதுச் சிறுவனைப் பேருந்து ஒன்றில் கத்தியால் குத்திக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு பதின்ம வயதினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் நடந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மீது 27 முறை கத்தியில் குத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட இளையர்களில் ஒருவருக்கு 15 வயது. மற்றொருவருக்கு 16 வயது.
கடந்த மே மாதம் இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் சிறுவயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டு மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் என நீதிபதி சுட்டினார்.
இருவரும் குறைந்தது 15 ஆண்டு 110 நாள்கள் சிறைத் தண்டனை முடித்த பின்பே அவர்களுக்கு நன்னடத்தையின் பேரில் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை பெறும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டர்.