கொரோனா வைத்தியசாலையில் தீ விபத்து ; இருவர் பலி

Vasanth
Report this article
மும்பையின் பாண்டப் பகுதியில் உள்ள ஒரு மாலில் அமைந்துள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் குறித்த மாலில் மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், 23 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த தீ விபத்தில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அத்துடன் அங்கிருந்த கொவிட் நோயாளர்கள் பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 76 நோயாளிகள் மீட்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் தீப்பரவல் ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசிய மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், "நான் ஒரு மாலில் ஒரு வைத்தியசாலையில் பார்த்தது இதுவே முதல் முறை.
இது மிகவும் கடுமையான நிலைமை. ஏழு நோயாளிகள் வென்டிலேட்டர்களில் இருந்தனர். 70 நோயாளிகள் வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்படும்" என கூறியுள்ளார்.