கனடிய இராணுவ தள தீ விபத்து, பொதுமக்களுக்கு ஆபத்தில்லை!
மத்திய நியூ பிரன்ன்ஸ்விக் பகுதியில் உள்ள கனடிய இராணுவப் பயிற்சித் தளத்தில் பரவி வரும் தீயினால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடிய ஆயுதப்படைகளின் கேஜ்டவுன் தளத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பயிற்சிப் பகுதியில் இந்தத் தீ பரவி வருவதாகவும், நிலைமையை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கனடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அனுமதி இன்றி பயிற்சித் தளத்திற்குள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அது கடுமையான பாதுகாப்பு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு தற்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. அப்பகுதியில் புகை மூட்டம் காணப்படலாம் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த இராணுவப் பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பயிற்சித் தளத்தின் வான்பரப்பில் ட்ரோன்களை இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீ பரவிய பகுதியில் இராணுவத்தினர் எவரும் இருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.