இராணுவ பயிற்சி முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல்; அறுவருக்கு நேர்ந்த சோகம்
தென் ஆப்பிரிக்காவின் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலினால் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவின் வடக்கு கேப் மாகாணத்தில் உள்ள இராணுவ பயிற்சி முகாமில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப் பயிற்சி முகாமுக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ இராணுவ பயிற்சி முகாமுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இராணுவ முகாம் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் போன்றவை கொழுந்துவிட்டு எரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் இந்த தீ அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 6 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.