அமெரிக்காவில் மற்றுமொரு பரபரப்பு; புறப்பட தயாரான விமானத்தில் தீ; அலறிய பயணிகள்
அமெரிக்காவின் டெக்சாஸ் விமானநிலையத்திலிருந்து புறப்பட தயாரான யுனைட்டட் எயர்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்ததால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
டெக்சாஸ் விமானநிலையத்திலிருந்து விமானம் புறப்படதயாரனவேளை திடீரன தீப்பிடித்ததால் விமானத்திற்குள் பதற்ற நிலையேற்பட்டதை தொடர்ந்து அனைத்து பயணிகளும் பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர்
. விமானத்தின்பின்பகுதியில் ( இறக்கை) பகுதியில் ஒரேஞ்நிற தீப்பிளம்புகளை பயணிகள் அவதானித்துள்ளனர்,தங்களை விமானத்திலிருந்து வெளியேற்றுமாறு அலறியுள்ளனர்.
109 பேருடன் புறப்படதயாரான விமானம்
பயணியொருவர் தனது கமராவில் தீப்பிளம்புகளை காண்பிப்பதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பயணிகள் தீ பரவுவதை காண்பித்து அலறுவதை அவதானிக்க முடிகின்றது.
தயவு செய்து எங்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள் தீ என அவர்கள் அலறுகின்றனர். பின்னர் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.சிலர் அவசரகால வெளியேற்றல் வழிமுறைகளை பயன்படுத்தி வெளியேற்றப்பட்டனர், பயணிகள் ஓடுபாதைக்கு அருகில் நிற்பதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
104 பயணிகள் உட்பட 109 பேருடன் நியுயோர்க்கிற்கு விமானம் புறப்படதயாரான வேளையே விமானத்தில் தீப்பிடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.