ஈரான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் துப்பாக்கி சுடும் பயிற்சி
ஈரானில் அரசு டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வழங்கும் நிகழ்ச்சிகளை அரச டிவி நிறுவனம் மூலம் வெளிப்படையாக ஒளிபரப்பி வருக்கின்றனர்.

இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பயிற்றுநர்களும் நேரலையில் துப்பாக்கியால் சுடும் காணொலிகள் வெளியாகியுள்ளன.
இதில் ஒரு நிகழ்ச்சியில் 7.6239 மிமீ தோட்டாக்களைப் பயன்படுத்தும் ஏகே - 47 ரக துப்பாக்கியின் செயல்விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டது.
இதில், ஆயுதப் பயிற்சியாளர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
மக்களைப் போருக்குத் தயார்படுத்தும் விதமாக இந்தப் பயிற்சி வழங்கப்படுவதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிகள் கல்வி சார்ந்தவையாகக் குறிப்பிடப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.
ஈரானில் நாடு முழுவதும் பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனப் பொதுமக்கள் பலருக்கும் பொது இடங்களில் வைத்து ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல பதின் வயதினரும் இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.