மீட்டிங் வராத 99 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்
அமெரிக்காவில் இயங்கி வரும் இசை கருவிகளை விற்கும் நிறுவனம் ஒன்றில் மீட்டிங் வராத 99 ஊழியர்களை நிறுவன முதலாளில் அதிரடியாக தூக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் ஒருவர் தான் வேலைக்கு சேர்ந்த ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு தூக்கப்பட்டதாக Reddit சமூக வலைத்தளத்தில் புலம்பி தள்ளியுள்ளார். அவரது பதிவில்,
தான் இன்டர்ன்ஷிப்க்கு சேர்ந்த 1 மணி நேரத்தில் நிறுவனத்தின் சிஇஓ தன்னுடன் சேர்த்து 99 பேரை பணி நீக்கம் செய்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தில் அன்றைய தினம் 111 பேரை மீட்டிங்கிற்கு சிஇஓ அழைத்துள்ளார், ஆனால் 11 பேர் மட்டுமே மீட்டிங்குக்கு வந்துள்ளனர்.
இதனால் கடுங்கோபமடைந்த சிஇஓ அனைவரையும் அதிரடியாகத் வேலையை விட்டு நீக்கியதாக கூறப்படுகின்றது.