கனடாவில் குரங்கம்மை நோய் பதிவு
கனடாவில் முதல் குரங்கமை நோய் பதிவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
கனடாவின் மானிட்டோபா பகுதியில் இவ்வாறு குரங்கம்மை நோயாளர் ஒருவர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பொது மக்களுக்கு இந்த நோய் தொற்று பரவக்கூடிய அபாயங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குரங்கமை நோயினால் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கமை நோயாளர்கள் அதிகம் பதிவாகின்றனர்.
குறித்த நாடுகளிலிருந்து திரும்புவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்ற மையம் குறிப்பிடத்தக்கது.
கனடாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குரங்கமை நோய் தாக்கம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.