பைசர் தடுப்பூசியின் 2வது டோஸை போட்டுக்கொண்டார் ஜோ பைடன்
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை போட்டுக் கொண்டார். உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக்கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் வைரஸ் பரவல் மட்டும் குறைந்தபாடில்லை.
இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
விரைவில் பதவி ஏற்க உள்ள அவர், பதவியேற்றதும் முதல் 100 நாளில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார். அத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசியான பைசர் மருந்தின் முதல் டோஸை நேரலையில் மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடன் போட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தற்போது 2வது டோஸை ஜோ பைடன் செலுத்திக் கொண்டுள்ளார்.